போலி பாஸ்போர்ட்டில் ‘பறந்து’ வந்தவர் கைது

திருச்சி, டிச.9: மலேசியாவிலிருந்து புறப்பட்ட ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் திருச்சி வந்தது. இமிகிரேசன் அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், தரங்கணிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் வைரவன்(40) என்பவர் குறித்த காலத்துக்கு மேல் மலேசியாவில் இருந்ததால் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் போலி ஆவணங்கள் தயாரித்து, போலி சீல் வைத்தும் தயாரித்த போலி பாஸ்போர்ட் மூலம் டில்லியிலிருந்து மீண்டும் மலேசியா சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி வந்தபோது இமிகிரேஷன் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்த வைரவனை இமிகிரேஷன் அதிகாரிகள் திருச்சி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED காயமடைந்த முதியவர் சாவு