×

பயிர் இழப்பீடு தொகை வழங்க கோரி18ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிரை காப்பாற்ற வேண்டும்

திருத்துறைப்பூண்டி, டிச. 9: திருத்துறைப்பூண்டி பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிரை காப்பற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்துறைப்பூண்டி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல கிராமங்களில் பயிர் முழ்வதும் வடிவதுமாக உள்ளது. ஆனால் பல கிராமங்களில் பயிர் முழ்கி இருப்பது குறித்து விவசாயிகள் காலதாமதமாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடிகால் தூர்வாரததால் பல நூறு ஏக்கர் சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் மற்றும் அதையொட்டியுள்ள கிராமங்களான ஐயன்கட்டி, பனிரெண்டாம் கண்ணி, காத்தான்கட்டளை, பொந்தைவெளி, வௌவெட்டு உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல நூறு ஏக்கர் சம்பா பயிர்கள் முழுவதும் நீர் முழ்கி உள்ளது.

திருப்பத்தூர், காடுவாகொத்தமங்களம் ஆகிய பகுதிகளுக்கு முக்கிய வடிகாலான பொண்ணுக்குண்டான் ஆறு மற்றும் கிளை வாய்க்கால் வடிகால்கள் சரிவர தூர் வாராததால் தண்ணீர் தேங்கி சி.ஆர்.1009 நெல் பயிரிடப்பட்டுள்ள சுமார் 120 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழைநீர் வடிய இன்னும் 20 நாட்களுக்கு மேலாகும். தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலைஅடந்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி முன்னோடி விவசாயி தனபால் கூறும்போது :வடிகால்களை தூர்வாரி தண்ணீரை வடியவைத்து விவசாயிகளின் நலன் கருதி பல நூறு ஏக்கர் சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறையும், வேளாண்மை துறையும் உடனே நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்ற தேவையான இடுபொருட்கள் இலவசமாக வழங்கவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : demonstration ,
× RELATED அடிப்படை வசதி செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்