×

விவசாயிகள் சங்கம் அறிவிப்பு வலங்கைமான் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெட்டவெளியில் கிடந்த இரும்பு கம்பிகள் அகற்றம்

வலங்கைமான், டிச. 9: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அலுவலகத்திற்கு இடையூறாக இருந்த கம்பிகள் தினகரன் செய்தி எதிரொலியாக மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், சட்டமன்ற அலுவலகம், புள்ளியியல் அலுவலகம் ஆகியவை தற்போது ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காவல் நிலையத்தின் மூலம் குற்றவழக்குகளில் தொடர்புடைய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் காவல் நிலையம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றிற்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.

மேலும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு திட்டபணிகளுக்கான கம்பிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே திறந்த வெளியில் அலுவலகத்திற்கு பெரிதும் இடையூறாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், வாகனங்களை வெளியே எடுப்பதற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. எனவே அலுவலகத்திற்கு இடையூறாக காவல்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குற்றவழக்குகளுக்கு தொடர்புடைய லாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கம்பிகள் ஆகியவற்றை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது செய்தி என தினகரன் நாளிதழில் நேற்று(8ம்தேதி) படத்துடன் வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரில் பல மாதங்களாக குற்றவழக்குகளில் தொடர்புடைய இரண்டு லாரிகளை மாற்று இடத்திற்கு நேற்று காலை காவல் துறையினர் கொண்டு சென்றனர்.
மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அலுவலகத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மாற்று இடத்தில் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Tags : Farmers' Union Announces Removal of Wireless Iron Wires ,Valangaiman Union ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளுக்கு மட்டும் மறைமுக தேர்தல்