கலெக்டர் அறிவிப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு

திருவாரூர், டிச.9: 2018-19ம் ஆண்டில் விடுபட்டுள்ள கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டிற்கான இழப் பீட்டு தொகை வழங்க கோரி வரும் 18ம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக் டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வை. சிவபுண்ணியம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசியக்குழு கூட்டம் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றது.இதில் டிசம்பர் 8ம்தேதி முதல் 13 வரை நாடு தழுவிய அளவில் பிரசாரம் செய்வது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது, அதன்படி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி 50 சதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.

நிலுவையில் உள்ள பயிர்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும், முதியோர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பென்சன் வழங்கிட வேண்டும், மாநில அரசு அமல்படுத்தியுள்ள ஒப்பந்த பன்னை சட்டத்தை கைவிட வேண்டும்.2018-19 ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையினை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி டிசம்பர் 13 ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பிரசாரம் செய்வது, மேலும் விடுபட்டுள்ள கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு தொகை உடனே வழங்கிட வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, சேலம் உபரி நீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக மாவட்ட பொருளாளர் ராவணன் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.


Tags : Collector ,
× RELATED கட்டிய வீட்டக் காணோம்... கலெக்டரிடம் விவசாயி புகார்