திருவாரூர் மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடஇன்று மனுதாக்கல் செய்யலாம்

திருவாரூர், டிச.9:திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்யலாம் என கலெக்டர் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2019 டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது.அதன்படி, தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் தாக்கல் 9 ம் தேதி (இன்று )முதல் துவங்கி வரும் 16 ம் தேதி முடிவடைகிறது. வரும் 17 ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை 19 ம் தேதியன்று திரும்ப பெறலாம்.முதல்கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 27 அன்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30 ம் தெய்தியன்றும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ல் நடைபெறும். ஜனவரி 4 ல் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும். தேர்ந் தேடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு ஜனவரி 6 ல் நடைபெறும்.மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்த்தேடுப்பதற்கான மறைமுக தேர்தல்கள் ஜனவரி 11 ம் தேதி நடைபெறும்.

எனவே மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ம் தேதிகளில் கீழ்கண்ட விபரப்படி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 27 ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. குடவாசல், கொரடாச்சேரி, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 30 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.மேற்கண்ட விபரப்படி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ள பதவியிடங் களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திட விரும்புவோர் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரிடம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திடலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த்
அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Thiruvarur ,district ,election ,government ,
× RELATED திருவாரூர் மாவட்டம்...