×

சாரம் அமைக்கும் பணி மணல் கடத்திய வேன் பறிமுதல் வாலிபர் கைது

கும்பகோணம், டிச. 9: கும்பகோணம் அருகே மணல் கடத்தி வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அருகே பந்தநல்லூர் ஓடை வாய்க்கால் மதகு பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பந்தநல்லூர் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனில் வந்த வேட்டைமங்கலம் காந்திநகரை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர்.Tags :
× RELATED புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்