×

வேறொருவர் அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.28.93 லட்சம் நகை கடன் பெற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு

புதுக்கோட்டை, டிச.9: அனுமதியின்றி வேறொருவர் அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.28.93 லட்சம் நகை கடன் பெற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் உடையப்பன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.அந்த புகாரில் புதுக்கோட்டை காமராஜபுரம் 2-ம் வீதியை சேர்ந்த சண்முகம் (35), சோலை சுப்பிரமணியன் என்பவரின் அனுமதி இல்லாமல் அவரது அடையாள அட்டைகளை பயன்படுத்தி 6 தவணைகளில் ரூ.28 லட்சத்து 93 ஆயிரத்திற்கு நகைகளை அடகு வைத்து நகைக்கடன்களை பெற்று உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி, சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : plaintiff ,Rs ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது