×

11 பாட்டில்கள் பறிமுதல் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மரவாமதுரையில் தேசிய வங்கி துவங்க வேண்டும் 100 நாள் வேலை ெதாழிலாளர்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி அருகே உள்ள மரவாமதுரையில் தேசிய வங்கி துவங்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி ஒன்றியம் மரவாமதுரை பகுதியில் உள்ள பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை பெறுவோர் 100நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வகையான தங்களின் வங்கிச்சேவைக்கு காரையூர், நகரப்பட்டி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் நிலையுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று வரவேண்டிய நிலையுள்ளது. எனவே மரவாமதுரை, கங்காணிப்பட்டி,சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மரவாமதுரையில் தேசிய வங்கி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்