×

பொன்னமராவதி கொல்லங்காட்டில் குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி பேரூராட்சி கொல்லங்காட்டில் உடைந்து மோசமாக உள்ள சிமெண்ட் சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் வலையபட்டி பகுதியில் உள்ளது கொல்லங்காடு. இந்த பகுதிக்கு செல்வற்காக சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை உடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்குச் சென்நு வரமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக குடியிருப்பு மற்றும் திருமண மண்டபங்களுக்கு செல்வோர் வசதிக்காக குண்டும் குழியுமான இந்த சாலையினை சீர் செய்து தரமான சிமெண்ட் சாலை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Motorists ,dump ,Ponnamaravathi ,pit road ,
× RELATED திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை வடிகாலால் வாகன ஓட்டிகள் அச்சம்