×

கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் கைது

கொள்ளிடம், டிச.9: கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து மாட்டுவண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமம் தேவேந்திரன் மகன் கிருஷ்ணகுமார்(20), கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் பாஸ்கர் (50) ஆகிய இருவரும் இரண்டு மாட்டுவண்டிகளில் கொள்ளிடம் ஆற்றில் கீரங்குடி என்ற இடத்திலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று கொள்ளிடம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த இரண்டு மாட்டுவண்டிகளையும் மடக்கி, வண்டியோட்டிகள் இருவரையும் கைது செய்து, மணலுடன் வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். இரவு நேரங்களில் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,
× RELATED சேலம் அருகே அரசு பேருந்துமோதியதில்...