×

ஒரு நாளைக்கு 23 முறை பூட்டப்படும் ரயில்வே கேட் வாகன ஓட்டிகள் அவதி

கீழ்வேளூர், டிச.9: கீழ்வேளூர்-கச்சனம் சாலையில் உள்ள ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 23 முறை பூட்டப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நாகை- திருவாரூர் ரயில் மார்க்கத்தில் கீழ்வேளூர் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையம் அருகே கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் ரயில்வே கேட் உள்ளது.இந்த ரயில்வே கேட்டை காரைக்கால், நாகையில் இருந்து தினமும் அதிகாலை 4.45 மணிக்கு பெங்களூருக்கு பாஸ்ட் பாசஞ்சர், காலை 7.15மணி, 1.30 மணி 3.30 மணி, மாலை 6.30 மணி ஆகிய நேரத்தில், காரைக்கால் திருச்சி பாசஞ்சர் ரயில்களும், மாலை 5 மணிக்கு காரைக்கால் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு இரவு 9.45 மணிக்கு காரைக்காலில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பரஸ் ரயிலும் கடந்து செல்கிறது.அதேபோல் சென்னையில் இருந்து காரைக்காலுக்கு அதிகாலை 4.30 மணிக்கும், திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு காலை 8 மணி, 10 மணி, மதியம் 1.30 மணி இரவு 8 மணிக்கு பாசஞ்சர் ரயில்களும், இரவு 9 மணிக்கு பெங்களூர், காரைக்கால் பாஸ்ட் பாசஞ்சர் ரயில்களும், கீழ்வேளூர் ரயில்வே கேட்டை கடந்து செல்கிறது. மேலும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கீழ்வேளூர் வழியாக நிலக்கரி, இரும்பு தூள் ஏற்றிக் கொண்டு ஒரு நாளைக்கு 6 முதல் 10 முறை சரக்கு ரயில்களும் செல்கிறது.

இதனால் ஒரு நாளைக்கு 23 முறைக்கு மேல் கீழ்வேளூர் ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. ஒரு முறை ரயில்வே கேட்டை பூட்டினால் குறைந்தது 15 நிமிடத்திற்கு மேலும், கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் கிராசிங் ஏற்பட்டால் 20 நிமிடத்திற்கு மேலும், ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. தினம் தோறும் இந்த ரயில்வே கேட்டை சுமார் 30 முறை பேருந்துகளும், நூற்றுக்கணக்கான ஆட்டோ, வேன், கார் மற்றும் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும் கடந்து செல்கிறது. ஒரு முறை ரயில்வே கேட் பூட்டினால், கேட்டின் இரண்டு பக்கமும் சுமார் 150க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனமும், 30க்கும் மேற்பட்ட பேருந்து, லாரி, கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களும் நிற்கிறது. கீழ்வேளூர் கச்சனம் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளதால் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கேட்டில் மாட்டிகொள்கிறது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருன்றனர். ரயில்வே கேட் போடப்பட்டால் சுமார் 20 நிமிடங்கள் கேட்டில் மாட்டிக் கொள்வதால் அவசரத்திற்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகினறனர்.எனவே மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் உள்ள கீழ்வேளூர் ரயில்வே கேட் உள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், அல்லது சுரங்க பாதை அமைத்து தர வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Railway gate motorists ,
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...