×

பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் நாகை டிஎஸ்பி அறிவுறுத்தல்

நாகை, டிச.9: நாகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென டிஎஸ்பி முருகவேல் அறிவுறுத்தியுள்ளார்.நாகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகையில் நேற்று நடந்தது.வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வரவேற்றார். டிஎஸ்பி முருகவேல் தலைமை வகித்து பேசியதாவது: நாகை நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், பிரசவ வார்டுகள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு கூடங்கள், சந்தைகள், வணிக வளாகம்,ஏடிஎம் மையங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள், நகை கடைகள், அடகு கடைகள், வட்டி கடைகள், சமுதாய கூடங்கள், கோயில்கள், வழிபாட்டு தலங்கள், அரசியல் அலுவலகங்கள், மத்திய மற்றும் மாநில அலுவலகங்கள், பஸ்ஸ்டாண்ட் என்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவசியம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்ற சம்பங்கள் நடந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

நாகை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அவசியம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். அதே போல் திருமண மண்டபங்களிலும் அவசியம் கேமிரா பொருத்த வேண்டும். கேமரா பொருத்துவதால் குற்றசம்பங்கள் நடைபெறுவதை குறைப்பதுடன், குற்றம் நடந்தால் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும்.மேலும் சிசிடிவி கேமிராவில் பதிவாகும் அனைத்து நிகழ்வுகளையும் தங்களிடம் உள்ள செல்போன் வாயிலாகவும் பார்த்து கொள்ள முடியும். எடுத்துகாட்டாக நகை கடை வைத்திருப்பவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவுடன் கடையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமிரா மூலம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கொண்டு வீட்டில் இருந்தபடி தங்களது செல்போனில் பார்த்து கொள்ளலாம். திடீரென கடையில் மர்ம நபர்கள் நுழைவது தெரிந்தால் வீட்டில் இருந்தபடியே அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும். அவ்வாறு தகவல் தெரிவிப்பதால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றம் நடைபெறாமல் தடுக்க முடியும்.எனவே பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அவசியம் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன், ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : areas ,
× RELATED குற்றங்களை தடுக்க செய்துங்கநல்லூரில் சிசிடிவி கேமரா