×

வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் ஒத்திவைப்பு கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு

கரூர், டிச. 9: கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு மின் உற்பத்தி மறறும் பகிர்மான வட்டத்தில் வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற இருந்த கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதிக்கான தேர்வுகள் தொடர் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.எனவே 2ம்தேதி நடைபெற இருந்த தகுதி தேர்வு வரும் 12ம் தேதி அன்றும், 3ம்தேதி அன்று நடைபெற இருந்த தேர்வு 13ம் தேதி அன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vepampalayam Sub Power Station ,
× RELATED தரமற்ற பணியால் பொதுமக்கள் எதிர்ப்பு