×

5 நாட்களுக்கு பின் லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ணம்

கரூர், டிச. 9: ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று லேசான அளவில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கரூர் மாவட்டம் முழுதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர்ந்து லேசான அளவில் மழை பெய்து மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு நேற்று காலை 8 மணியளவில் மாவட்டம் முழுவதும் லேசான அளவு மழை பெய்தது. மேலும், இந்த மழை பொழிவினை அடுத்து ஒரு நாள் முழுவதும் மேகம் மூட்டமாக காணப்பட்டதுடன், வானிலை மாற்றத்துடன், ஜில்லென்ற கிளைமேட்டுடன் காணப்பட்டதால் அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை சீசன் முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், மேலும் மாவட்டம் முழுவதும் மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


Tags :
× RELATED தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை...