×

அரவக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அபராதம் விதிக்க எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி, டிச. 9: அரவக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் அருகில் நிற்கும் புகை பிடிக்காதவர்கள் பல்வேறு உபாதைகளால் அவதிப்படுகின்றனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. இங்கு பேருந்து நிறுத்தங்கள், மருத்துவமனைகள். வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்களில் பீடி சிகரெட் புகைக்க கூடாது என்ற சட்டம் உள்ளது. அப்படி விதியை மீறி மீறுபவர்களுக்கு ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் உள்ளது.இந்நிலையில் மேற்கண்ட இடங்களில் கட்டுப்பாடு இல்லாமல் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கும் இதயம் மற்றும் நுரையீரல் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. இம்மாதிரி விதியை மீறி புகை பிடித்து தனக்கு மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் நுரையீரல், இதய நோய் உள்ளிட்ட நோய் தாக்கத்தை இலவசமாக பரப்புகின்றனர்.

உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையினர், காவல் துறையும் இணைந்து அவர்களை பிடித்து அவர்களுக்கு அறிவுறுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் அரவக்குறிச்சி பகுதியில் சர்வசாதாரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. அருகில் இருப்பவர்களுடைய முகத்தில் புகை படுவதால் பல்வேறு சச்சரவுகள், சன்டைகள் ஏற்படுகின்றது.இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் பல்வேறு பொது இடங்களில் புகைப்பவர்கள் முகத்திலேயே புகையை ஊதுகிறார்கள். பொதுமக்கள் தட்டிக் கேட்டால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்படுகின்றது. இதனால் சுவாசிப்பது கஷ்டமாக இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தும் அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்வதில்லை அரவக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : places ,smokers ,Aravakurichi ,area ,
× RELATED தங்கம் சவரனுக்கு 56 அதிகரிப்பு