×

நாளை கார்த்திகை தீப திருநாள் விதவிதமான வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனை

கரூர், டிச. 9: கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு கரூரின் பல்வேறு பகுதிகளில் தீப விளக்குகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதம் கார்த்திகை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வரும் கார்த்திகை தீப விழாவினை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வீடுகளிலும் தீப விளக்கால் விளக்கேற்றி கொண்டாடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இதன்படி நாளை தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. விளக்குகளின் தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.களி மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் கரூர் நகரின் பல்வேறு ப குதிகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
× RELATED பல்வேறு வகையில் பிரசாரம் செய்தாலும்...