×

சிறுமியிடம் சில்மிஷம் பள்ளி மாணவன் கைது

செஞ்சி, டிச. 9: செஞ்சி அருகே உள்ள  கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் 4ம்  வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தாயை பார்க்க சிறுமி சென்றுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த 17  வயது சிறுவன், சிறுமியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை  அறிந்த சிறுமியின் தாய், செஞ்சி போலீசில் புகார் செய்தார். புகாரின்  பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அந்த சிறுவனை கைது செய்தனர். சில்மிஷ புகாரில் கைது செய்யப்பட்ட சிறுவன் அருகில் உள்ள அரசு  பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : SILMISHMAN SCHOOL STUDENT ,
× RELATED கடலூரில் புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி ஆய்வு