முன்விரோத தகராறில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்

திருவெண்ணெய்நல்லூர், டிச. 9:  திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக்கில் சென்ற கூலி தொழிலாளியை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி, மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (47), கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தண்டபாணி (47) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிவேல் சொந்த வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மணிவேலின் இருசக்கர வாகனத்தை தண்டபாணி வழிமறித்து அவரை ஆபாசமாக திட்டி எட்டி உதைத்துள்ளார். இதை தட்டிக் கேட்டதற்கு தண்டபாணி, அவரது மனைவி செல்வி, மகன் அழகேசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த மணிவேலை அவரது மனைவி உண்ணாமலை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.இதுகுறித்து உண்ணாமலை திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தண்டபாணி உள்ளிட்ட 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது மனைவி செல்வி, மகன் அழகேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: