×

வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

நெல்லிக்குப்பம், டிச. 9: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், நெல்லிக்குப்பம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரனை செய்தனர். அதில், நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்த 16 வயது சிறுவன், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் நெல்லிக்குப்பம் சுதாகர் நகரை சேர்ந்த சத்தியா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.Tags : house ,
× RELATED வீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்