சிதம்பரம் அருகே பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு கட்டை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

புவனகிரி, டிச. 9: சிதம்பரம் நகர எல்லையை ஒட்டி கான்சாகிப் வாய்க்கால் ஓடுகிறது. சிதம்பரம் சுற்று வட்டார கிராமங்களுக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் கான்சாகிப் வாய்க்கால் விளங்குகிறது. சிதம்பரம் நகரை அடுத்த சி.கொத்தங்குடி கிராமத்தின் வழியே இந்த வாய்க்காலின் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் பல்வேறு நகர் குடியிருப்புகளுக்கும், கிராமங்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

ஆனால் சமீப காலங்களாக கான்சாகிப் வாய்க்காலின் பக்கவாட்டு தடுப்புகள் உடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால் பாலத்தின் மேல் வாகனங்களிலோ அல்லது நடந்தோ யாராவது சென்றால் பக்கவாட்டு சுவர்கள் இல்லாமல் தவறி வாய்க்காலில் விழும் அபாய நிலை உள்ளது. வாய்க்காலில் தற்போது தண்ணீர் நிறைய ஓடுவதால் இந்த வழியாக செல்பவர்களுக்கு ஆபத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கான்சாகிப் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Chidambaram ,bridge ,
× RELATED விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்...