×

தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று குமரி வருகை சோனியாகாந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்

நாகர்கோவில், டிச.9:  சோனியாகாந்தி பிறந்தநாள்விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தலைவர்கள் இன்று குமரி மாவட்டம் வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இம்பீரியல் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி காலை 5.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருகிறார். ரயில் நிலையத்தில் அவரை குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்கின்றனர். பின்னர் காலை சோனியாகாந்தி பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டுகிறார். இதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் ராபர்ட் புரூஸ் இல்ல திருமண விழா வரவேற்பு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். குமரி மாவட்டம் வரும் காங்கிரஸ் தலைவர்கள் வருகைக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags : KS Alagiri ,Tamil Nadu Cong ,Committee ,Kumari ,
× RELATED கன மழையால் பாதிக்கப்பட்ட...