×

திருவண்ணாமலை அருகே திடுக்கிடும் தகவல்கள்

திருவண்ணாமலை, டிச.9: திருவண்ணாமலை வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஒருதலை காதலால் இந்த விபரீதம் நடந்துள்ளது.திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியன்(30). இவர் திருவண்ணாமலை- போளூர் சாலையில் மருந்து கடை வைத்திருந்தார். இந்த நிலையில், இவர் திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ரேவதி என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.கடந்த வாரம் உதயசூரியன் திருவண்ணாமலை அருகே உள்ள எடப்பாளையம் ஏரிக்கரை அருகே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து, உதயசூரியனின் செல்போனில் அவர் கடைசியாக பேசிய எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.விசாரணையில், திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த சஞ்சய்(21), ஏழுமலை(19), சந்தோஷ்(20), தாமரை நகரை சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகியோர் சேர்ந்து உதயசூரியனை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சஞ்சய், ஏழுமலை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜீவ்காந்தி என்பவர் ரேவதி நடத்தி வந்த பெட்டிக்கடைக்கு செல்லும்போது அவரை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்தார். ஆனால், ரேவதி ராஜீவ் காந்தியை காதலிக்கவில்லை.இந்தநிலையில், உதயசூரியனை ேரவதி திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரம் அடைந்த ராஜீவ்காந்தி உதயசூரியனை கொலை செய்ய திட்டமிட்டார். தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக உதயசூரியனுடன் பழகி வந்தார். மேலும், ஜவ்வாது மலையில் பள்ளி நடத்தி வருவதாகவும், மருத்துவ பொருட்கள் தேவை என்றும் கடைசியாக கேட்டுள்ளார்.மேலும், இதற்கான தொகையை கொடுக்க வேண்டும் என்று உதயசூரியனை தொடர்பு கொண்டு ராஜீவ்காந்தி அன்று இரவு பேசியுள்ளார். இதையடுத்து, எடப்பாளையம் ஏரி அருகே நிற்பதாக உதயசூரியன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து எடப்பாளையம் ஏரிக்கரைக்கு காரில் ராஜீவ்காந்தி தனது நண்பர்கள் சஞ்சய், ஏழுமலை, சந்தோஷ் ஆகியோருடன் வந்தார்.எடப்பாளையம் ஏரிக்கரை வந்ததும், அங்கு நின்று கொண்டிருந்த உதயசூரியனை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். உதயசூரியன் காரில் ஏறி உட்கார்ந்ததும் காரின் பின்னால் உட்கார்ந்திருந்த சஞ்சய், ஏழுமலை, சந்தோஷ் ஆகிய 3 பேரும் உதயசூரியனின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.பின்னர், 200மீ தூரம் சென்றதும், உதயசூரியனின் சடலத்ைத சாலையில் வீசிவிட்டு சென்றனர். உதயசூரியன் இறந்தால் தனது காதலை ரேவதி ஏற்றுக் கொள்வார் என்பதால் ராஜீவ்காந்தி இவ்வாறு செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும், தலைமறைவாக உள்ள சந்தோஷ், ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED தனது கள்ளக்காதலியிடம் பழகியதால்...