×

செய்யாறு அடுத்த வாழ்குடை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை தொடக்க விழா எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு, டிச.9: செய்யாறு கல்வி மாவட்டம் வாழ்குடை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் எல்.நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார்.விழாவில், எம்எல்ஏ தூசி கே.மோகன் பேசுகையில், `அறக்கட்டளை சார்பில் மாலை நேர வகுப்புகளை தொடங்கி பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்து, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், மாநிலத்திலேயே முன் மாதிரி அரசு பள்ளியாக செயல்பட வேண்டும்'''' என்றார்.த்ெதாடர்ந்து, முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை நிதிக்காக ₹10 ஆயிரம் வழங்கினார். மேலும், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் வேணுகோபால், முன்னாள் ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், ரவி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில், முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் தொடர்பான ஆய்வக உபகரணங்கள், ஒலிப்பெருக்கி, ஸ்மார்ட் கிளாஸ் என ₹2.50 லட்சம் மதிப்பில் நன்கொடை வழங்கபட்டது.இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன முதன்மை விஞ்ஞானி ஏ.உதயகுமார், இ.குப்புசாமி, இ.உதயகுமார் என்.சத்தியமூர்த்தி, சி.கோவிந்தராஜ், கே.கோபாலகிருஷ்ணன், என்.ஆனந்தன், வழக்கறிஞர் ரமணி நம்பி ஆகியோர் செய்து இருந்தனர்.



Tags : Alumni Foundation Inauguration at Banquet Government School ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே