×

வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பரதராமியில் விரைவில் ஆர்டிஓ செக்போஸ்ட் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பிடிக்க நடவடிக்கை

வேலூர், டிச.9: வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பரதராமியில் விரைவில் ஆர்டிஓ செக்போஸ்ட் அமைத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் வாகனங்கைடிள பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை வழியாக சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது. இதில் ஆந்திராவில் இருந்து வரும் சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்கள் சில, தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்ட்டை தவிர்த்துவிட்டு, பனமடங்கி, பரதராமி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர்.இப்படி தினமும் ஏராளமான வாகனங்கள் மாற்று வழியை பயன்படுத்தி செல்வதால் பர்மிட் இல்லாத வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள் என்று விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அருகே உள்ள ஆர்டிஓ செக்போஸ்ட்டை போன்று, பரதராமியிலும் செக்போஸ்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திட்ட அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பரதராமியிலும் ஆர்டிஓ செக்போஸ்ட் அமைக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : RTO Checkpost ,
× RELATED வாகனங்கள் திருடிய வாலிபர் கைது: 8 பைக் பறிமுதல்