குடியாத்தம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 10 டிராக்டர் வாங்கி ₹40 லட்சம் மோசடி 9 பேர் மீது வழக்கு

வேலூர், டிச.9: குடியாத்தம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 10 டிராக்டர் வாங்கி ₹40 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் வளத்தூரை சேர்ந்தவர்கள் பாலாஜி, சோமசுந்தரம், பச்சையப்பன், ஏழுமலை, செல்வகுமார், கார்த்திகேயன், கருணீக சமுத்திரத்தை சேர்ந்த மணி, நடுபேட்டையை சேர்ந்த ஜாஹீர்அகமது, தட்டப்பாறையை சேர்ந்த பார்த்திபன் ஆகிய 9 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து நிதி நிறுவனம் மூலமாக 10 டிராக்டர்கள் வரை வாங்குவதற்காக சுமார் ₹40 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டிராக்டர்களை வாங்கிய பின்னர் சரியான முறையில் மாத தவணை தொகையை செலுத்தவில்லையாம். இதுகுறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.எஸ்பி உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார், டிராக்டர்களை வாங்கி மாத தவணை செலுத்தாமல் ₹40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பாலாஜி, சோமசுந்தரம் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>