×

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

திருவள்ளூர், டிச.9:  திருவேற்காடு நகர ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற  12ம் தேதி  திருவேற்காடு  தேவி கருமாரியம்மன் திருக்கோயில் காலை 5 மணிக்கு கோ பூஜையும்,  7 மணிக்கு மாதிரவேடு செல்வ விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமமும்,   8 மணியளவில் பள்ளி குப்பத்தில் நலிவுற்றவர்களுக்கு  போர்வை மற்றும் படுக்கை விரிப்பு வழங்குதலும் ,  9 மணியளவில் வள்ளிக்கொல்லைமேடு இந்திரபுரி ஈஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்குதலும், 9.30 மணியளவில் மாதிரவேட்டில் மரக்கன்றுகள் நடுதலும், 10 மணியளவில் மன்ற நிர்வாகிகளுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டம் வழங்குதலும் மற்றும் தலைக்கவசம் வழங்குதலும், மேத்தா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வலியுறுத்தி மனித சங்கிலியும் நடக்கிறது.

 11 மணியளவில் கோலடி அரசு உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குதலும், மதியம் 12 மணியளவில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜையும, அன்னதானமும் வழங்குதலும், , மாலை 3 மணியளவில் அயனம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்குதலும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் திருவேற்காடு  தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி தங்கத்தேர் இழுத்தலும் நடக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு திருவேற்காடு நகர ரஜினி மக்கள் மன்ற  செயலாளர் ரஜினி ஆர்.பாஸ்கர் தலைமை தாங்குகிறார்.  நகர நிர்வாகிகள் ஆர்.ரமணா, என்.செந்தில்குமார், சி.ஆனந்த்குமார் சாய் சுரேஷ், ஸ்ரீதர், சுரேஷ், பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  இந்த விழாக்களில் மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி,  நிர்வாகிகள் சி.பி.ரமேஷ்குமார், ஆர்.சி.சேகர், என்.சுனில்சக்கரவர்த்தி, சி.கருணாகரன், எம். வெங்கட்ட முனிவேல், எஸ்.எம்.கே.அன்சாரி, ஜெகன், ஆர்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும், தங்கத்தேர் இழுத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

Tags : Rajinikanth ,Birthday Party ,
× RELATED அரசியலுக்கு வர நிர்பந்திக்கும்...