×

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தகராறு வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, டிச. 9: கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா (34). இவர் நேற்று மாதர்பாக்கம்  செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி (27) என்பவர்  இரு சக்கர வாகனத்தில் சுமித்ராவை ஏற்றுக்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளார். பின்னர், சுமித்ராவை அவர் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்த புகாரின்பேரில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து திருப்பதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.   

Tags : dispute ,Gummidipoondi ,
× RELATED கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற பெண் கைது