மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

குன்றத்தூர், டிச. 9: வேலூர், சின்ன பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (30). கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியில் தங்கி மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று தளம் போடுவதற்கு பலகைகள் கொண்டு வந்தனர். அதை சதீஷ் முதல்தளத்தில் இருந்து வாங்கி வைத்துக்கொண்டு இருந்தார். சமீபத்தில் பெய்த மழையால் பலகைகள் அனைத்தும் ஈரமாக இருந்ததால் அவ்வழியாக சென்ற உயரழுத்த மின்சார கம்பியில் சதீஷ் தூக்கிய பலகைகள் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சதீஷ் மயங்கி விழுந்தார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் சதீஷை மீட்டு, சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED தொழிலாளிக்கு கத்திக்குத்து