சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

செங்கல்பட்டு, டிச. 9: சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மறைமலைநகர் காவல் ஆய்வாளர் செல்வம், முன்னாள் நகராட்சி தலைவர் கோபி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி மறைமலைநகரின் முக்கிய தெருக்களின் வழியாக 5 கி.மீ தொலைவுக்கு நடைபெற்றது. இதில் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவர்கள் மற்றும் 15 வயதுக்கும் மேற்பட்டோருக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன.
இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Environmental Awareness Marathon ,
× RELATED விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில்...