கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து

அண்ணாநகர், டிச.7: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள ‘பி’ சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. அரசு பேருந்துகள், பள்ளி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இந்த சாலையில் மாடுகள் கூட்டமாக திரிவதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்வாறு சாலையில் திரியும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வீசப்படும் காய்கறி கழிவுகளை சாப்பிடுவதற்கு வரும் மாடுகள், இந்த சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதால், தினசரி காலை மற்றும் மாலை வேலையில் பள்ளி வாகனங்கள், அலுவலகத்துக்கு செல்பவர்கள், 108 ஆம்புலன்ஸ், அரசு பேருந்துகள் நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும், என வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Road accident ,Coimbatore ,
× RELATED தாராபுரத்தில் சாலை விபத்து...