இந்தி மொழி பயிற்சி அளிப்பதை கண்டித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முற்றுகை

சென்னை, டிச.7: இந்தி மொழி பயிற்று அளிப்பதை கண்டித்து சென்னையில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற திமுக எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்று அளிப்பதை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் சென்னை மத்திய கைலாஷில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம். எழிலரசன்  எம்எல்ஏ தலைமை தாங்கினார். இணை செயலாளர் பூவை ஜெரால்டு, துணை செயலாளர்கள் கவி கணேசன், மண்ணை தாஸ், சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அமைப்பாளர்கள்  கொட்டிவாக்கம் அருண், சோம சுந்தர மூர்த்தி, வானவில் விஜய் எல்.பிரபு, வெற்றி,  டி.கே.மோகன், டிசீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலாப்பூரில் நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டனர். அவர்களை மத்திய சென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மயிலை பகுதி செயலாளர் த.வேலு ஆகியோர் சந்தித்து பேசினார்.

Related Stories:

>