×

நெல்லை, பொதிகையில் வரும் பயணிகள் எழும்பூர் வரை செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நெல்லை, பொதிகை எக்ஸ்பிரசில் வரும் பயணிகள் எழும்பூர் வரை பயணம் செய்ய டிக்கெட் பரிசோகரிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்- நெல்லை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ்கள், அதைப்போன்று ரயில் எண் (12632) நெல்லை- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12662) 4ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

மேலும் பணிகள் காலக்கெடுவிற்கு முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே தாம்பரம் வரை முன்பதிவு செய்த பயணிகள் தற்போது எழும்பூருக்கு ரயில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து பயணிகள் தாம்பரம் வரை முன்பதிவு செய்தவர்கள் எழும்பூர் வரை பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் டிடிஇ சந்தித்து அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தி எழும்பூர் வரை பயணிக்கலாம். மேலும் இது தாம்பரத்தில் இருந்து 7ம் தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : passengers ,Southern Railway ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...