2 கொள்ளையர்கள் கைது 60 சவரன் நகை பறிமுதல்

வேளச்சேரி: துரைப்பாக்கம், ராஜிவ்நகரை சேர்ந்தவர் ஐயம்பாண்டி (30).  இவர் கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50 ஆயிரத்தை   கொள்ளையடித்துச் சென்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முகப்பேர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (32), முத்து (23), ஆகிய இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை தேடி வந்தனர்.     

 இந்நிலையில் கடந்த 1ம் தேதி, ஸ்ரீதரை போலீசார் கைது செய்து, 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். முத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்துவை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் நீலாங்கரை, துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடிய வெட்டுவாங்கேணியை சேர்ந்த முருகன் (19) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 25 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: