குழந்தைக்கு கத்திக்குத்து

பெரம்பூர்: புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (24).  இவருக்கு திருமணமாகி சல்மா (23) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஸ்டீபனின் தம்பி ஜோதிரஞ்சன். நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஜோதிரஞ்சன்  தனது அண்ணனை கத்தியால் குத்த முயன்போது, ஸ்டீபனின் குழந்தை விஷால் மீது கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிரஞ்சனை கைது செய்தனர்.Tags : baby ,
× RELATED தேர்தல் களத்தில் 3 மாத குழந்தை