வர்த்தக உரிமம் பெறாத தங்கும் விடுதிகளுக்கு சீல்

புதுச்சேரி, டிச. 5: உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், உணவகங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் ஆகியவை புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973ன்படி நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு வர்த்தக உரிமம் பெறாமல் இயங்கிவரும் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், உணவகங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் கண்டறியப்பட்டு அவை சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு நகராட்சியால் சீல் வைக்கப்படும். ஆதலால் நகராட்சி வர்த்தக உரிமம் இல்லாமல் இயங்கிவரும் மேற்கூறிய அனைத்து வர்த்தகங்களும் உடனடியாக உழவர்கரை நகராட்சி வருவாய் பிரிவை அணுகி உரிமத்திற்கு விண்ணப்பிக்குமாறு இதன்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: