உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

உளுந்தூர்பேட்டை,  டிச. 5:  உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் மதுரா தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி(34) இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது.  இவருக்கு ஜெயந்தி(29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது  ஜெயந்தி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த  போது வயிற்றுவலி வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கு போட்ட நிலையில்  கிடந்துள்ளார். இதனைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருவெண்ணைய்யைநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைஅளித்தனர். பின்னர்  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்  சிகிச்சை பலனின்றி ஜெயந்தி உயிரிழந்தார்.

Advertising
Advertising

இந்த சம்பவம் குறித்து  திருநாவலூர் காவல்நிலையத்தில் ஜெயந்தியின் தம்பி வைரமுத்து(27) கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்கு பதிந்து விசாரணை  செய்து வருகிறார். திருமணமாகி 5 வருடம் மட்டுமே ஆவதால் தற்கொலை சம்பவம்  குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமார், திருக்கோவிலூர் ஆர்டிஓ  மேல் விசாரணை செய்கின்றனர்.

Related Stories: