×

கல்லூரி மாணவி மாயம்

புவனகிரி, டிச. 5: சிதம்பரம் சம்பந்தகார தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவரது மகள் தீபா(17). இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார்.கடந்த 2ம் தேதி கல்லூரிக்கு சென்ற தீபா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து தீபாவின் தந்தை ரமேஷ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், கல்லூரிக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என்றும், சிதம்பரம் கொத்தனார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (19) என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கல்லூரி மாணவி மாயம்