உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு

உளுந்தூர்பேட்டை,  டிச. 5: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தின் உள்ளே கடைகளுக்கு முன் பகுதியில் தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்களை  நிறுத்திவைத்துவிட்டு செல்வதால் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் உள்ளே  சென்று திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பயணிகள்  பேருந்துகளில் இருந்து இறங்கி நடந்து செல்ல முடியாத வகையில் இருசக்கர  வாகனங்களை நிறுத்தி வைத்து இருப்பதால் நேற்று காலை உளுந்தூர்பேட்டை  காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் போக்குவரத்து  மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து  இருசக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: