×

குளத்தில் தவறி விழுந்தவர் பலி

செஞ்சி, டிச. 5: செஞ்சியில் குளத்தில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார். செஞ்சி பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (42). நேற்று அவர் செஞ்சி பேரூராட்சி எதிரில் உள்ள நவாப் குளத்தில் கால் கழுவ சென்ற போது தவறி குளத்தில் தவறி விழுந்தார், உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இதுகுறித்து கிருஷ்ணராஜ் மனைவி சாந்தி செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : pool ,
× RELATED சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது