சின்னசேலம் பஸ் நிலையம் அருகே மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சின்னசேலம், டிச. 5: சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, சேலம், நைனார்பாளையம் செல்லும் சாலைகள் உள்ளது. இதில் நைனார்

பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் இந்த சாலையில் வாகனம் ஓட்டி செல்கின்றனர். இந்த சாலையில் அவ்வப்போது கிராவல் மண் கொட்டு கிறார்களே ஒழிய தார் சாலை போடுவதில்லை. அதைப்போல சின்னசேலம் பஸ்நிலையத்தில்  இருந்து சேலம் நெடுஞ்சாலையில்  15 மீட்டர் தொலைவில் தார்சாலையில் மெகாசைஸ் பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் சாலையின் குறுக்காக மிக நீளமாக உள்ளது. இதனால் இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் வரும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனம் ஓட்டி செல்கின்றனர். ஆகையால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அந்த பள்ளத்தை சரி செய்வதுடன், சேலம் பஸ் கள்ளக்குறிச்சி செல்ல வந்து நிற்கும் மண் தள பகுதியையும் தார்சாலையாக போட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: