திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்

திருவெண்ணெய்நல்லூர், டிச. 5: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேல் தணியாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீரவிஜயன், கருணாநிதி, பாலமுருகன்

ஆகிய மூவருக்கும் அதே ஊரின் எல்லையில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. 3 பேரும் நிலத்தில் தனித்தனியாக மின் மோட்டார் பொருத்தியுள்ளனர். இவர்களின் மோட்டாரில் இருந்த சுமார் 40மீட்டர் மின்சார ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி அதே பகுதியில் கடந்த வாரம் ஒரு மின் மோட்டாரில் மின்சார ஒயர் திருடுபோனது. மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே ஊரில் உள்ள பச்சைவாழி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பீதியில் உள்ளனர். இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை  பிடித்து கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>