×

விபத்தில் வாலிபர் பலி

ரிஷிவந்தியம், டிச. 5:  ரிஷிவந்தியம் அருகே மேமாளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் சகாய ஸ்டீபன்ராஜ் (20). இவர் தனது இருசக்கர வாகனத்தில் காட்டு எடையார் மெயின் ரோடு அருகே வந்தபோது சேலம் மாவட்டம் வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் பூபதி (55) என்பவர் அதிவேகமாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக ஸ்டீபன்ராஜ் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.

மேலும் பைக் சாலையில் நின்றிருந்த காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த குப்புராமன் மகன் ஜெயராமன் (24) மீது மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் ஸ்டீபன்ராஜ் உடலை மீட்டு அப்பகுதி மக்கள் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரோக்கியதாஸ் அளித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED நாங்குநேரி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி