சேத்தியாத்தோப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சேத்தியாத்தோப்பு, டிச. 5: சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 500க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு, வடக்கு மெயின் ரோடு, மேல்நிலை பள்ளி சாலை, சென்னி நத்தம், கிளாங்காடு, கனகரத்தினம் தெரு, பிள்ளையார் கோயில் தெரு போன்ற பகுதிகளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவும், அன்றாட செயினங்களுக்காகவும், அவசர பண தேவைகளுக்காகவும், கோழி, ஆடு, முயல் போன்றவற்றை வளர்த்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில்,

இப்பகுதிகளில் சுற்றி திரியும் நாய்கள், இவைகளை கடித்து கொன்று வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல முறை பேரூராட்சி
நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் நாய்கள் பிடித்து பல ஆண்டுகள் ஆகிறது. தெருவில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன.எனவே, சேத்தியாத்தோப்பு பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags : area ,Cheethiopettu ,
× RELATED ஆம்பூர் பகுதியில் நாளுக்கு நாள்...