×

4வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூர், டிச. 5: கடலூர் மாவட்ட கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் தொடர் மழை காரணமாக நான்காவது நாளாக மீன்பிடி பணி பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கடந்த மாதம் 30ம் தேதி முதல் தொடங்கி மூன்றாம் தேதி வரை பெய்தது. அதைத்தொடர்ந்து தற்போது மழை குறைந்துள்ளது. மழை ஓய்ந்த நிலையிலும் கடலூர் மாவட்ட கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மீன்பிடி பணிகள் தொடர்ந்து நான்காவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தின் காரணமாக மீன் பிடிக்கும் பணிக்கு மீனவர்கள் செல்லாததால் மீன்கள் விலையும் கிடுகிடு என உயர்ந்து உள்ளது. மீன்பிடி பணிகள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு அரசு உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடலூர் கடல் பகுதியில் நான்கடி உயரம் வரை அலைகள் எழும்பியது. இதனால் தொடர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட பகுதிகளில் கரை பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது