×

தீக்குளித்த மூதாட்டி பலி

விருதுநகர், டிச. 5: விருதுநகர் அருகே ஜக்கதேவி நகரை சேர்ந்தவர் மாரியப்பன், நிலத்தரகு தொழில் செய்கிறார். இவரது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அப்போது முதல் தாய் வள்ளியம்மாள் (71) மனநிலை பாதிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மாரியப்பன் வீட்டு மாடியில் வசித்து வந்த வள்ளியம்மாள் கடந்த நவ.25ம் தேதி நள்ளிரவில் மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வள்ளியம்மாள் சிகிச்சை பலன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக ரூரல் போலீசில் மாரியப்பன் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : firefighter ,
× RELATED மதுரையில் தீ விபத்து மீட்பு பணியில்...