×

6 பேர் கைது: 6 பேர் மீது வழக்கு ‘குடிமகன்களை’ கட்டுப்படுத்துமா போலீஸ் வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம்: 41 பேர் கைது

வத்திராயிருப்பு, டிச. 5: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாயினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வத்திராயிருப்பில் முத்தாலம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சி ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். கூமாப்பட்டி நகர செயலாளார் முத்துப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் கோவிந்தன் இளைஞர் பெருமன்றம் சேர்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ‘சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நாகை திருவள்ளுவனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். டிஎஸ்பி ராஜேந்திரன், வத்திராயிருப்பு போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என கூறி, 41 பேரை கைது செய்தனர்.

Tags :
× RELATED ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6...