மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அருப்புக்கோட்டை, டிச. 5: அருப்புக்கோட்டையில் உள்ள இக்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் சேக் மஹபுப் வரவேற்றார். வேதியியல் பாட நிபுணர் ஜான்வெஸ்லி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன் கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்கள் தொடர்பான 150க்கு மேற்பட்ட படைப்புகளை, மாணவர்கள் கண்காட்சியில் வைத்திருந்தனர். சுற்றுச்சூழல், டிராபிக் சிக்னல், 3டி ஒளிப்பட கருவி, சோலார் ரயில், பழங்கால உணவு வகைகள், மாசுக்கட்டுப்பாட்டு கருவி, மூலிகைச்செடிகள், கீழடி ஆய்வு ஆகியவை குறித்த படைப்புகளை வைத்திருந்தனர்.

Tags : Science Exhibition ,Matric School ,
× RELATED பழங்குடியினர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி