×

நகர்வர்த்தக சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல் கட்டுமான பணிகள் தீவிரம்

காளையார்கோவில், டிச.5: காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் நகர் வர்த்தக சங்கம் சார்பில் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நலன் கருதி நகர் வர்த்தக சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர் வர்த்தக சங்கத் தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ, மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி, கவுரவத்தலைவர் நாகராஜன், சங்க ஆலோசகர் ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏராளமான பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். மேலும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் தாமஸ் அமலநாதன், ஜஸ்டின்திரவியம் ஆகியோர் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை நகர் வர்த்தக சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஷாஜகான், துணைத்தலைவர் லியோன் பாஸ்கர், துணைச்செயலாளர் ஜோசப்ஆனந்தன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Municipal Association ,
× RELATED ஸ்டீல் விலை உச்சத்தால் அரசு கட்டுமான பணிகள் நிறுத்தி இன்று ஸ்டிரைக்