×

காரிமங்கலம் அருகே கிராமப்புற மின்வாரிய அலுவலகம் அமைக்காததால் மக்கள் அவதி

காரிமங்கலம், நவ.5: காரிமங்கலம் அருகே துணை மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும், கிராமப்புற  மின்வாரிய அலுவலகம் அமைக்கப்படாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.காரிமங்கலம் அருகே கேத்தனஅள்ளியில் துணை மின் நிலையம், கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதை கேத்தனஅள்ளி, அனுமந்தபுரம், அண்ணாமலைஅள்ளி, முக்குளம், எலுமிச்சினஅள்ளி, பொம்மஅள்ளி உட்பட 9 பஞ்சாயத்துக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்து இந்த துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சுமார் 9ஆயிரம் மின் இணைப்புகள் இப்பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மின்வாரிய பணி மற்றும் மின் கட்டணம் செலுத்துவதற்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, காரிமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.

தற்போது இத்துணை மின் நிலையம் கேத்தனஅள்ளியில் தொடங்கப்பட்டு 10மாதங்களாகியும் கிராமப்புற மின்சார அலுவலகம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள், மின் கட்டணம் செலுத்துவதற்கு கடந்த காலத்தைப் போல மீண்டும் காரிமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிராமப்புற மின் வாரிய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மின் வாரிய அதிகாரிகள், இப்பகுதியில், கிராமப்புற மின் வாரிய அலுவலகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : electricity office ,Karaimangalam ,
× RELATED கால்வாய் வசதி இல்லாததால்...