உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் இட ஒதுக்கீடு விபரம் வெளியீடு

சிவகங்கை, டிச.5: சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சிவகங்கை ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பெண்(பொது), வார்டு எண் 17 எஸ்சி(பெண்), வார்டு எண் 12எஸ்சி(பொது), வார்டு எண் 3, 4, 5, 6, 8, 14, 15, 18 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. இளையான்குடி ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி எஸ்சி(பொது). வார்டு எண் 1, 14 எஸ்சி(பெண்), வார்டு எண் 2, 10 எஸ்சி(பொது), வார்டு எண் 3, 4, 7, 8, 12, 16 ஆகியன பெண்(பொது) மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. காளையார்கோவில் ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி எஸ்சி(பெண்). வார்டு எண் 12, 19 எஸ்சி(பெண்), வார்டு எண் 18 எஸ்சி(பொது), வார்டு எண் 2, 5, 6, 7, 8, 9, 13, 15 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. மானாமதுரை ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பெண்(பொது). வார்டு எண் 11, 12 எஸ்சி(பெண்), வார்டு எண் 13 எஸ்சி(பொது), வார்டு எண் 1, 2, 6, 7, 9 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. கல்லல் ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பெண்(பொது). வார்டு எண் 8, 16 எஸ்சி(பெண்), வார்டு எண் 13 எஸ்சி(பொது), வார்டு எண் 5, 6, 9, 10, 11, 12 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது. வார்டு எண் 2, 16 எஸ்சி(பெண்), வார்டு எண் 1, 4 எஸ்சி(பொது), வார்டு எண் 3, 6, 7, 9, 12, 13, 17 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன.

தேவகோட்டை ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது. வார்டு எண் 10, 13 எஸ்சி(பெண்), வார்டு எண் 5 எஸ்சி(பொது), வார்டு எண் 4, 6, 7, 9, 11 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. கண்ணங்குடி ஒன்றியத்தில் 6 வார்டுகள் உள்ளன.
தலைவர் பதவி பொது. வார்டு எண் 1 எஸ்சி(பெண்), வார்டு எண் 3 எஸ்சி(பொது), வார்டு எண் 2, 5ஆகியன பெண்(பொது), வார்டு எண் 4, 6 பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. சாக்கோட்டை ஒன்றியத்தில் 11 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பெண்(பொது). வார்டு எண் 8 எஸ்சி(பெண்), வார்டு எண் 3 எஸ்சி(பொது), வார்டு எண் 1, 2, 6, 10, 11 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. திருப்புத்தூர் ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது. வார்டு எண் 6 எஸ்சி(பெண்), வார்டு எண் 1 எஸ்சி(பொது), வார்டு எண் 2, 4, 5, 7, 9, 12 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்கம்புணரி ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது. வார்டு எண் 6 எஸ்சி(பெண்), வார்டு எண் 2, 3, 4, 8 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்.புதூர் ஒன்றியத்தில் 7வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பெண்(பொது). வார்டு எண் 7 எஸ்சி(பெண்), வார்டு எண் 1, 4, 5 ஆகியன பெண்(பொது), மற்றவை பொது என ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags : Council Election Councilor Reservation ,
× RELATED 75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள்...